Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நடுவண் பாதுகாப்பு படையை சென்னை உயர்நீதி மன்றத்தில் அமர்த்துவது மாநில உரிமையை பாதிக்கும் செயல்.

இந்திய அரசு படைகளை தமிழகத்தில் குவிப்பது தமிழக அரசின் இறையாண்மையில் தலையிடுவதாகும்.

தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு மதிப்பளிக்காத நீதிபதிகள் , போராடிய வழக்கறிஞர்களை கைது செய்ய உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் இந்திய அரசின் கீழ் இயக்கம் நடுவண் பாதுகாப்பு படையை காவலுக்கு அமர்த்த வேண்டும் என்றும் நீதிபதிகள் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளனர். இதை தமிழக அரசு எதிர்த்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் மாநில அரசின் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்க வேண்டியது. இங்கு நடுவண் அரசின் பாதுகாப்பு படை நுழைந்தால் மக்களுக்கும், தமிழக வழக்கறிஞர்களுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். ஏற்கனவே விமான நிலையம், தொடர்வண்டி நிலையங்களில் இந்தி மட்டுமே பேசக்கூடிய நடுவண் அரசின் பாதிகாப்பு படை இருந்து வருகிறது. இங்கு அடிக்கடி பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படைக்கும் வாக்குவாதம் நடந்து வருகிறது. இந்திய அரசு தமிழ் தெரியாத வடநாட்டவர்களை வேண்டுமென்ற இங்கு பணியில் அமர்த்தி தமிழ் மக்களுக்கு பெரும் சிக்கலை கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் உயர்நீதி மன்றத்தில் தமிழ் தெரியாத இந்தி பாதுகாப்பு படையை அமர்த்தினால் அடிக்கடி மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயல் தமிழக அரசின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாகும் செயலாக அமைந்து விடும். மாநில காவல்துறையின் மீதான நம்பிக்கையை குலைப்பதாகவும் இது அமைந்து விடும். தமிழ் மொழி உரிமைக்காக  இனி பல நிறுவனங்களை எதிர்த்து தமிழ் மக்கள் போராடினால் அங்கெல்லாம் நடுவண் பாதுகாப்பு படையை இந்திய அரசு அமர்த்தும் வாய்ப்பு உள்ளது. மெல்ல மெல்ல தமிழகம் இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் அபாயமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இப்படியான மாநில உரிமையை பாதிக்கும் செயலில் இந்திய அரசு ஈடுபடக் கூடாது என்றும்  இந்திய அரசின் பாதுகாப்புப் படையை  சென்னை உயர்நீதி மன்றத்தில் அமர்த்துதல் கூடாது என்றும், ஏற்கனவே விமான நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களில் உள்ள இந்திய அரசின் பாதுகாப்புப் படையை இந்திய அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது. 
[vuukle-powerbar-top]

Recent Post