Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ் மொழிக்கான கொடி உருவாக்கம். முதல்  கலந்தாய்வுக் கூட்டம் இனிதே நடந்தேறியது !

04-10-2015 ஞாயிறு அன்று சென்னை தமுக அலுவலகத்தில் தமிழ் மொழிக்கான  ஒரு பொதுக்கொடியை  உருவாக்க தமிழ் உணர்வாளர்கள் பலரும் கூடினர். முகநூலில் ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் அழைப்பு விடுத்தோம். இருப்பினும் குறுகிய காலத்தில் நம் அழைப்பை ஏற்று தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருகிறது.

தமிழ்க் கொடி உருவாக வேண்டும் என்று பலமுறை பல அமைப்புகள் முயற்சி செய்திருந்தாலும் அம்முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை. அதற்காக நாம் நம் முயற்சியை மேற்கொள்ளாமல் இருக்க முடியாது என்ற வகையில் தமிழ் மொழிக்கான கொடி உருவாக்கத்தில் பங்குபெற தமிழ் ஆர்வலர்களை அழைத்து கருத்துக் கேட்டோம். தமிழ்க் கொடியின் நிறம் எவ்வாறு இருக்க வேண்டும். எப்படியான சின்னங்கள் இக்கொடியில் இடம்பெற வேண்டும் என்று வாக்கெடுப்பு நடத்தினோம் . வாக்கெடுப்பின் முடிவில் தமிழ்க் கொடி எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கருதுகிறார்களோ அவ்வாறன கொடி வடிவமைப்பை உருவாக்கி அடுத்த கட்ட கலந்தாய்வில் நாம் வெளியிட உள்ளோம். அடுத்து இன்னும் ஒரு மாதத்தில் மேலும் பல தமிழ் அறிஞர்களை அழைத்து அடுத்த கலந்தாய்வில் அடுத்த கட்ட தமிழ்க் கொடிக்கான நகர்வை நாம் முன்னெடுக்க உள்ளோம். இம்முறை வர இயலாதவர்கள் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் . இறுதியான கொடி பல தமிழ்த் தேசிய தலைவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களால் இறுதி செய்யப்படும் . இறுதியான கொடி தமிழக அரசின் ஒப்புதலுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ் மொழிக்கான கொடியை நம் தலைமுறை காலத்திலேயே உருவாக்கி பட்டொளி வீசிப் பறக்க விடுவோம். வாழ்க தமிழ் .


[vuukle-powerbar-top]

Recent Post