Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்தியர்கள் ஆக்கப்பட்ட அந்தமான் தமிழர்கள் !

உறவினர் ஒருவர் அண்மையில் அந்தமான் தீவிற்கு சென்று வந்தார். என்னிடம் அந்தமான் தீவின் அழகை பற்றி பெருமையாக பேசினார். கடற்கரை, பவளப்பாறைகள், இயற்கை வளங்கள் யாவும் அந்தமான் தீவில் இந்திய அரசு சிறப்பாக பாதுகாத்து வருகிறது என்று கூறினார். நான் அவரிடம் சற்று ஆர்வமாக அங்குள்ள தமிழர்களை சந்தித்தீர்களா ? அவர்கள் எப்படி உள்ளனர் என்று கேட்டேன் . அதற்கு அவர் , அங்கு நிறைய தமிழர்கள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே பேசுகிறார்கள் என்று கூறினார். இதை கேட்டதும் எனக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அந்தமான் தீவின் பூர்வகுடி மக்களான காடுறை வாழ்க்கை நடத்தும் மக்கள் பேசும் மொழி தமிழ் மொழியை ஒத்துள்ளது. சோழர்கள் அந்தமான் தீவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் பல்லாயிரம் தமிழகத் தமிழர்கள் அந்தமானின் குடியேற்றப்பட்டனர். தமிழர்களுக்கு பிறகே வங்காளிகள் பெருமளவில் குடியேற்றப்பட்டனர். இருப்பினும் தமிழர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டும். இவர்கள் அனைவரும் தமிழ் வழியில் படிக்க இந்திய அரசு உதவாமல் அவர்களிடம் கட்டாயமாக இந்தியை திணித்துள்ளது. தமிழ் மொழியை திட்டமிட்டு அழித்துள்ளது இந்தி இனவெறி அரசு.  இதன் விளைவாக தமிழர்கள் தற்போது தாய் மொழியை மறந்து அனைவரும் இந்தி பேசி வருகிறார்கள். வங்காளிகளுக்கும் இதே நிலை தான். காரணம் அந்தமான் அரசின் ஆட்சி மொழியாக இந்தியே இருந்து வருகிறது. இது எப்படியான அநீதி என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டிய தமிழக அரசு அந்தமான் தமிழர்களின் மொழி, பண்பாட்டை இந்தி ஆதிக்கத்தில் இருந்து காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத்தில் மட்டும் இலட்சம் தமிழர்களை இந்தி இனவெறி அரசு அழிக்கவில்லை. அந்தமான் தீவுகளிலும் இலட்சம் தமிழர்களின் தாய் மொழியை அழித்து ஒரு இனப்படுகொலையை நிகழ்த்தி உள்ளது இந்தி அரசு. இந்தி அரசிடம் இருந்து தமிழர்களை மீட்க தாயகத் தமிழர்கள் இனியாவது சரியான திட்டங்களை வகுக்க வேண்டும்.




அந்தமான்  தீவுகளில் உள்ள தமிழர் நிலை !
[vuukle-powerbar-top]

Recent Post