Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நடுவண் அரசுக்கு மீண்டும் ஒரு குட்டு . ஆதார் கட்டாயமில்லை என்ற உத்தரவில் மாற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு . மக்களுக்கு தனிமனித சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க அரசியல் சாசன அமர்வுக்கு ஆதார் வழக்கு மாற்றம். 

மக்களிடம் ஆதார் அட்டையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றம் இந்திய அரசுக்கு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. நீதிமன்றத்தில் இந்திய அரசின் வாதம் மனித உரிமைக்கு பெரும் சவாலாக அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆதார் அட்டையின் மூலமாக தனிமனித அடையாளங்கள் , அதாவது கண்விழிப் படலம், கைரேகை உள்ளிட்ட தகவல் சேகரிப்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும் என்று மனுதாரர் வாதம் செய்தார். இக்கேள்வியை நீதிபதிகளும் எழுப்பினர் . இதற்கு பதிலதித்த இந்திய அரசின் வழக்கறிஞர்கள் அரசு மக்களுக்கு சில நலத்திட்டங்களை அறிவித்துள்ளது . இந்த நலத்திட்டங்களை பெற வேண்டும் என்று விரும்பும் மக்கள் தனிமனித சுதந்திரம் பறிபோவது பற்றி கவலைப்பட மாட்டார்கள். தனிமனித சுதந்திரம் தான் முக்கியம் என்று கருதுபவர்கள் அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளனர். இது எவ்வளவு பெரிய அநீதி என்று பாருங்கள். மக்களிடம் ஆசைக் காட்டியும் மிரட்டியும் மக்களின் தனிமனித அடையாளங்களை பெறுவது சனநாகயமாக அல்லது சர்வாதிகாரமா ? விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டையை வாங்கப் போகிறார்கள் , விருப்பம் இல்லாதவர்களை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் இந்த அரசு. இந்தியை திணிப்பது போல இந்த அரசு ஆதார் அட்டையையும் திணிக்கிறது. அடுத்து ஆதார் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு அங்கு மக்களுக்கு தனிமனித சுதந்திரம் உள்ளதா இல்லையா என்ற விவாதம் நடக்கவுள்ளது. மக்களுக்கான தீர்ப்பு வரவேண்டும் என்பதே நம் விருப்பம். 
[vuukle-powerbar-top]

Recent Post