Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திரைப்பட சங்க தலைவர் பதவிக்கு ஒரு தமிழரே தேர்வு செய்யப்பட வேண்டும். திரையுலகில் இருந்து முதல் குரல் பாரதிராஜா . தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதை வரவேற்கிறது.

காலம் காலமாக தமிழக திரைப்பட சங்கம் தமிழர் அல்லாதவர்களால் ஆதிக்கம் செய்யப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். இது வரை நடந்த தேர்தல்களில் தமிழர் அல்லாதவர்களை எதிர்த்து தமிழர்கள் போர்க்குரல் கொடுக்க வில்லை. தமிழகத்தின் அராசியலில் திராவிடர்கள் ஆதிக்கம் செய்வதை வேடிக்கை பார்த்தது போல நடிகர் சங்கத்திலும் தமிழர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்த்து வந்தனர். இந்நிலையில் முதல்முறையாக தமிழர் அமைப்புகள் தமிழ் திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் தமிழர்கள் தான் போட்டியிட வேண்டும் என்றும் தமிழர் அல்லாதவர்கள் தலைவராக வரக் கூடாது என்று குரல் எழுப்பினர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பான அறிக்கையை கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு வெளியிட்டது. மேலும் தமிழர் அல்லாதவர்கள் திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் முற்றுகை போராட்டம் செய்வதாகவும் அறிவித்து உள்ளது .

இந்நிலையில் முதல்முறையாக தமிழ்த் திரையுலகத்தில் இருந்தே இதற்கு ஆதரவான குரல் இயக்குனர் பாரதிராஜா மூலமாக வந்துள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தை தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம் என்று பெயர் மாற்ற வேண்டும் என்றும் சங்கத்தின் தலைமை பதவிக்கு ஒரு தமிழரே வர வேண்டும் என்றும் பாரதிராஜா குரல் கொடுத்திருப்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மனமார வரவேற்கிறது. கலகம் உருவாகாமல் நன்மை பிறக்காது என்ற அடிப்படையில் இப்போது எழுதுள்ள இந்த விவாதம் தமிழர்களுக்கு நல்லொதொரு தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை . திரையுலகில் மட்டுமல்லாது தமிழகத்தின் அரசியலிலும் தமிழர் அல்லாதவர்கள் தலைமை பதவிக்கு போட்டியிடுதல் கூடாது என்பதை தமிழர்கள் நடுவே நாம் கொண்டு செல்வோம். இங்கு எல்லோரும் நலமுடன் வாழலாம் ஆனால் தமிழரே நம் இனத்தை ஆள வேண்டும் என்ற முழக்கம் வலுப்பெறட்டும் . 
[vuukle-powerbar-top]

Recent Post