Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழக (தென்னிந்திய) நடிகர் சங்க தலைவராக ஒரு தமிழரே தேர்வு செய்யப்பட வேண்டும் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசியலிலும் திரைத்துறையிலும் தமிழர் அல்லாதவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தலைவர் பதவிகளுக்கு தமிழர் அல்லாதவர்களே போட்டியிடுகிறார்கள். இதனால் தமிழர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்டு வாழ்கிறார்கள். பிற மாநிலங்களின் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர்களே நடிகர் சங்கத்தின் தலைவர்களாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் அவ்வாறு நடைபெறுவதில்லை . நடிகர் சங்க உறுப்பினராக பிற மொழியினர் இருப்பது தவறில்லை. ஆனால் தலைவராக பிற இனத்தவர்கள் வருவதை தமிழர்கள் நாம் அனுமதிக்க இயலாது. எல்லோரும் இங்கு வாழலாம் ஆனால் தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்ற அடிப்படையில் தமிழரே அரசியல் மட்டுமல்லாது திரைத்துறையிலும் தலைவர்களாக வேண்டும். விஷால் ரெட்டி அல்லது ராதாரவி போன்ற பிற மொழியினர் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமே தவிர தாங்களே தலைவராக இருக்க நினைப்பது தவறாகும். இவர்கள் தமிழகத்தின்  மண்ணின் மைந்தர்கள் தலைவராக வர துணைபுரிய வேண்டும் . தாங்கள் தமிழர் அல்ல என்பதை மக்களிடம் வெளிப்படையாக அறிவித்து ஒரு தமிழரையே தலைவர் பதவிக்கு அமர்த்திட வழிவகுக்க வேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதையும் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையையும் நடிகர் சங்கம் கருத்தில் கொண்டு அதற்கான வேலைகளை செய்ய அனைத்து நடிகர்களும் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது. தமிழர் அல்லாதவர்கள் தமிழ்நாடு நடிகர் சங்கத்தின் தலை பதவிக்கு போட்டியிடக் கூடாது என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது. தலைமை பதவிக்கு போட்டியிடம் தமிழர் அல்லாத நடிகர்கள் மண்ணின் மைந்தர்களுக்கு வழிவிட்டு தார்மீகப் பொறுப்புடன் அப்பதவிக்கான தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.



[vuukle-powerbar-top]

Recent Post