Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலகநெறி வகுத்த ஒப்பற்ற தமிழர் வள்ளலாரின் பிறந்த நாள் எமது இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடப்பட்டது.

உயிரை இரக்கமே கடவுள் வழிபாடு என்று உலகிற்கு சன்மார்க்க வழியை போதித்த வள்ளலாரின் பிறந்த நாளான இன்று எங்கள் நற்றிணை இல்லத்தில் அவரின் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினோம். தமிழர் அல்லாத பிற தேசிய இனங்களை சேர்ந்த ராஜஸ்தானிகள், பீகாரிகள், ஆந்திரர்கள், மலையாளிகள் மற்ற தேசத்தவர்களும் முதல் முறையாக வள்ளலார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர். வள்ளலார் யார்  என்று முதல் முறையாக கேட்டறிந்தனர். வள்ளலார் யார் என்று தமிழர்களுக்கே தெரியாத அவல நிலையில் பிற இனத்தவர்கள் வள்ளலார் யார் என்று கேட்பதில் வியப்பில்லை. இருப்பினும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி அனைவர்க்கும் வள்ளலார் யார் என்பதையும், அவரின் கொள்கைகளையும் சுருக்கமாக அனைவரும் அறியும்படி விளக்கினோம். அனைவரும் வள்ளலார் வழங்கிய 'அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை' என்ற கடவுள் இயற்கை விளக்கமாகிய மந்திரத்தை ஓதினர். இப்படி ஒரு மனிதர் இவ்வுலகில் வாழ்ந்துள்ளதாரா என்று வியப்புடன் கேட்டுச் சென்றனர் இந்தியர்கள் பலர். இன்னும் சில இந்தியர்களுக்கு  வள்ளுவர் யார் என்று கூட தெரியவில்லை என்பது வேதனையான செய்தியாகும்.

இனி வரும் காலங்களில் தமிழர்கள் நம் இல்லங்களில் வள்ளுவர் வள்ளலார் போன்ற தமிழ்ச் சான்றோர்களின் பிறந்த நாட்களில் கூடிய மட்டும் அவர்கள் இவ்வுலகிற்கு வழங்கிய செய்திகளை பிற தேசிய இன மக்களுக்கு கொண்டு செல்வோம். வள்ளலார் காட்டிய வழியில் இந்த அரசும் , மக்களும் பயனித்தாலே உலகில் அமைதியும் சமாதானமும் நிலைபெறும். ஏற்றத் தாழ்வுகளும் அநீதிகளும் இல்லாமல் போகும் .

 வாழ்க வள்ளலாரின் புகழ் ! வாழ்க தமிழ் மொழி ! 
[vuukle-powerbar-top]

Recent Post