Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இனத்திற்காக வேலை செய்ய வேண்டிய காவல்துறையை பணத்திற்காக அடியாள் வேலை செய்யும் விதமாக மாற்றியமைத்த திராவிட அரசுகள் ! 

ஒவ்வொரு தேசங்களிலும் hகாவல்துறை தாங்கள் சார்ந்த மண்ணுக்காக மக்களுக்காக வேலை செய்வார்கள். தங்கள் இனம் , மண் , மொழி இவைகளை காவல்துறை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவ்வாறு விட்டுக் கொடுத்தால் அவர்கள் மனசாட்சியே அவர்களை உறுத்தும். ஆனால் தமிழகத்தில் மட்டும் காவல்துறையின் நிலைமை தலைகீழ். இங்கு வாங்கும் காசுக்காக , அரசு கட்டளையிடும் பயங்கரவாத போக்குக்கு காவல்துறையும் துணைபோவது தான் வேதனையின் உச்சம். பண்புள்ள காவல்துறையை உருவாக்குவதற்கு பதிலாக தமிழகத்தை ஆண்ட தமிழர் அல்லாத திராவிட அரசுகள் தமிழர்களை தாக்கவே மூளைசலவை செய்யப்பட்ட காவல்துறையை  உருவாக்கி விட்டுள்ளது. கூடங்குளம் போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் , கோகோ கோலா ஆலை மூடும் போராட்டம் என எந்த போராட்டம் நடந்தாலும் தமிழகக் காவல்துறை உடனே அரசின் கூலிப் படையாக செயல்பட்டு போராட்டக் காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும். மக்கள் தங்களுக்கும் தங்கள் தலைமுறைக்கும் சேர்த்துத் தான் போராடுகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத காவல்துறை தான் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இவ்வகையான தாக்குதல் தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பது கூட காவல்துறைக்கு தெரிவதில்லை. இவர்களுக்கு தீணி போட்டு வளர்க்கும் அரசுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே காவலர்களுக்கு மேலோங்கி நிற்கிறது. இவர்களை இப்படியான மனநோயாளிகளாக மாற்றிய திராவிடக் கட்சிகளே காவல்துறையின் இந்த இழிநிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. 

திராவிடம் வீழ்ந்து தமிழர் ஆட்சி மலரும் போது காவல்துறைக்கு மண் , மக்கள் மொழி குறித்த பாடம் எடுக்கப்பட்டு அவர்கள் பண்புள்ளவர்களாக மாற்றப்படுவார்கள். மாற மறுப்பவர்கள் பணியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள். உலகின் சிறந்த காவல்துறை தமிழர் ஆட்சியில் உருவாக்கப்படும். 

கோகோ கோலா ஆலையை எதிர்த்து போராடியவர்களின் மீது பயங்கர தாக்குதல் நடத்திய காவல்துறையையும் அவர்களை ஏவிய அதிமுக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். 
[vuukle-powerbar-top]

Recent Post