Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழுக்காக வழக்கறிஞர்கள் போராடியதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 16 ஆம் தேதி முதல் நடுவண் அரசின் தொழில் பாதுகாப்பு படையினர் குவிகப்படுவார்கள். இது தமிழர்களுக்கான எச்சரிக்கை மணி.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். வழக்குகளும் தொடுத்து உள்ளனர். தமிழ் வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு எப்போதுமே உயர் நீதி மன்றம் செவி சாய்க்கவில்லை. முடிவில் வேறு வழியே இல்லாமல் தான் வழக்கறிஞர்கள் குழு நீதிமன்றத்தின் நீதிபதிகள் இருக்கும் வளாகத்திற்குள் நின்று போராட்டம் நடத்தினர். ஒரு உத்தரவின்  மூலமாக தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக  அறிவித்திருக்கலாம் நீதிபதிகள். ஆனால் இதை செய்வதை விட்டு விட்டு இந்தி அரசின் குரலாக தமிழ் வழக்கறிஞர்களை கைது செய்ய உத்தரவிட்டது. தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்த போது அது அரசின் கொள்கை அதில் நீதிமன்றம் தலையிடாது என்று கைவிரித்தது உயர்நீதிமன்றம். ஆனால் தமிழுக்காக போராடியதால் உடனடியாக நடுவண் பாதுகாப்பு படையை குவிக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். தேவைப்பட்டால் ராணுவத்தை கூட நீதிமன்றத்தில் நிறுத்தலாம் என்று பதிலளித்தது உச்காநீதிமன்றம். இது திட்டமிட்ட தமிழக அரசின் இறையாண்மையில் தலையிடும் செயலாகும். ராணுவத்தை குவிக்க அதிகாரம் உள்ள நீதிமன்றத்திற்கு தமிழ் மொழியை வழக்காடு மொழியாக ஆட்சி மொழியாக அறிவிக்க அதிகாரம் இல்லையா ? நீதிமன்றமும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு ஆதரவாக செயல்படுவது வேதனை .

தமிழக அரசு இவ்விடயத்தில் விட்டுக் கொடுக்காமல் சென்னை நீதிமன்றத்தில் நடுவண் பாதுகாப்பு படையை விளக்கிக் கொள்ள வேண்டும் என்றும் , தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கவும் சட்டமன்ற தீர்மானம் இயற்றி அதை ஆளுநருக்கும் குடியரசு தலைவருக்கும் அனுப்ப வேண்டும். தமிழக அரசு பதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்படும் அவமானமாகும். 
[vuukle-powerbar-top]

Recent Post