Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் நாட்டை தமிழரே ஆளும் நிலையில் தமிழீழம் மலரும்:  மாவீரர் நாளில் அதியமான் பேச்சு

தமுக அலுவலகத்தில் நடைபெற்ற 2015 மாவீரர் நாளில் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள், தமிழர் பண்பாட்டு நவுவத்தின் செயலாளர் இராச்குமார் பழனிசாமி, தமிழர் தேசிய முன்னணி தமிழ்ப் புலி சாத்தப்பன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு மாவீர்களுக்கு மலர் வணக்கம், சுடர் வணக்கம், அக வணக்கம் செலுத்தினர்.

மாவீரர் நாள் இன்று உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல அமைப்புகளும், கட்சிகளும் மாவீரர்களுக்கு வீர வணக்கம் சிறப்பான முறையில் வீர வணக்கம் செலுத்தினர். 2009 க்கு பிறகு தான் தமிழகத்தில் மாவீர்களுக்கு சிறப்பான முறையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது . தமிழர்கள் பலரும் இப்போது இந்நாளின் முக்கியத்துவத்தை அறிந்து தாங்களாகவே முன்வந்து மாவீரர் கூட்டங்களின் கலந்து கொள்கின்றனர் . அரசின் அடக்கு முறையை கடந்து தமிழர்கள் இக்கூட்டங்களில் பங்கெடுக்கின்றனர். ஈழத்தில் கூட சிங்கள ராணுவத்தின் தடையை மீறி தமிழர்கள் மாவீர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகிறார்கள். இவ்வுலகில் கடைசி தமிழன் உள்ளவரை மாவீரர்கள் நினைவு கூரப்படுவார்கள் . மாவீரர் நாளும் கடைபிடிக்கப் படும் என்று பேசினார் இராச்குமார் பழனிசாமி.

இறுதியில் பேசிய தமுக தலைவர் அதியமான் , தமிழகத்தில் தற்போதுள்ள திராவிட ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் , அதிமுக , திமுக ஆகிய கட்சிகளுக்கு தமிழர் எவரும் வாக்களித்து இனியும் ஏமாறக் கூடாது.தமிழின உணர்வாளர்கள் மட்டுமே ஆட்சியை கைப்பற்றி இந்திய பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் . இந்திய அரசை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும், அடிபணிய வைக்க வேண்டும் . அது தமிழர்களால் முடியும் , திராவிடர்களால் முடியாது . தமிழர் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தால் விரைவில் தமிழீழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசினார் .

தமிழீழ தேசம் உருவாக தமிழர்கள் நாம் அனைவரும் ஒருமித்து போராட வேண்டும் என்று எல்லோராலும் உறுதி ஏற்கப்பட்டது.



[vuukle-powerbar-top]

Recent Post