Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தீப ஒளி நாள். பழந்தமிழர் உலகிற்கு கொடுத்த நாளை இன்று உலகமே வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடுகிறது.

தீபாவளி குறித்து நம் இலக்கியங்கள் என்ன சொல்கின்றன. சங்க இலக்கியங்களில் நேரடியாக தீபாவளி என்ற சொல் இல்லையென்றாலும் விளக்கு வைத்து தமிழ் மக்கள் இந்நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய காணக் கிடைக்கிறது.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், விளக்கு வழிபாட்டைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது…

(நெடுநல்வாடை: 42-43)

இன்றும் தமிழகத்தில் கார்த்திகை தீப வழிபாடு, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரமும் முழுமதியும் கூடிய நன்னாளில் நடந்து வருகிறது. சங்கம் மருவிய கால இலக்கியமான கண்ணங்கூத்தனாரின் கார் நாற்பது, கார்த்திகை மாத தீப வழிபாட்டுக்கு ஆதாரமாக உள்ளது.

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் நாள் விளக்கு

(கார்நாற்பது -26)

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியும் கார்த்திகை விளக்கு குறித்து, ‘கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்’ என்று பாடுகிறது.

கார்த்திகை தீபத் திருநாள் தீபாவளியாக மாறியதா?

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீப வழிபாடே தீபாவளியாக மாற்றம் பெற்றது என்ற கருத்து உள்ளது. மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது தற்போதைய தீபாவளியின் வடிவம் உருவானதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் தீபாவளியின் வடிவம் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.

பழமையான சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூறில், அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில் இவ்வழிபாட்டுக்கு ‘தீபாவளி’ என்ற பெயர் இல்லையெனினும், அதையொத்த பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பது உறுதியாகிறது.

மறைமலை அடிகளார் தீபாவளியை பற்றி என்ன கூறுகிறார்..

"வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்."

சமண மதத்தினர் அனுசரித்த மகாவீரர் மோட்ச தினமும் பழந்தமிழர் அனுசரித்த கார்த்திகை தீபமும் இணைந்து இன்று நாம் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு அடிகோலியிருக்க வாய்ப்புள்ளது. காரணம் எதுவாயினும் இப்போது தமிழ் மக்கள் வெகுவாக இப்பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது.

தமிழர்களின் கார்த்திகை தீபத் திருவிழாவை தான் இன்று இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களும் தீபாவளி என்ற பெயருடன் கொண்டாடி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் தீபாவளியை பெரிதாக யாரும் கொண்டாடுவதில்லை. இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்கள் வெவ்வேறு வடிவத்தில் இந்நாளை கொண்டாடுகிறார்கள் . குஜராத்திகள் மற்றும் மார்வாடிகளுக்கு இந்நாள் புத்தாண்டு நாளாகும் . அவர்கள் புதுக்கணக்கை இன்று தொடங்குவார்கள். சில தேசங்களில் கோலமிட்டு கொண்டாடுவார்கள்.
இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் தீபாவளியை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதை இந்த இணைப்பில் காண்க https://en.wikipedia.org/wiki/Diwali

தமிழகத்தில் மட்டும் காலை எழுந்து எண்ணை தேய்த்து குளித்து கொண்டாடுவார்கள். உண்மையில் தமிழர்கள் யாருக்கும் இந்நாள் ஏன் கொண்டாடப்படுகிறது என்று தெரியாது . கிருஷ்ணன் நரகாசுரன் போன்ற ஆரியமதக் கட்டுக் கதைகளும் தெரியாது. ஆனால் எல்லா உறவினர்களையும் அழைத்து இனிப்பு வழங்கி புத்தாடை அணிந்து இந்த நாளை கொண்டாடுகிறார்கள் தமிழர்கள் . வட தேசங்களில் வீட்டில் விளக்கேற்றி இன்றும் கொண்டாடுகிறார்கள் . ஆனால் தமிழகத்தில் யாரும் விளக்கேற்றுவதில்லை . மாறாக கார்த்திகை தீபம் அன்று தான் தமிழர்கள் வீட்டில் விளக்கேற்றுவார்கள் . இதனால் நாம் அறிந்து கொள்ள முடிவது , தமிழர்களின் விளக்கு திருவிழா தான் பல்வேறு கதைகளை சுமந்து இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தீபாவளி திருநாளாக கொண்டாடப் படுகிறது. இதை பற்றியான உண்மை இன்று தமிழர்களுக்கே தெரியவில்லை என்பது தான் வேதனை.

இயற்கையை நேசிக்கும் தமிழர்கள் முற்காலத்தில் என்றுமே  பட்டாசு வெடித்து தீபஒளி நாளை கொண்டாடியதில்லை. குழந்தைகள், முதியோர்கள், நோயுற்றவர்கள் மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள் என பல உயிர்களும் பாட்டாசு வெடிச் சத்தத்தாலும் காற்று மாசாலும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. தமிழர்கள் இந்நாளை கொண்டாட வேண்டாம் என்ற பரப்புரை நிச்சயம் தமிழர்களின் நடுவே எடுபடவும் செய்யாது. காரணம் நாத்திகம் பேசும் திராவிடர்கள் தீப ஒளி நாளுக்கு எதிரான பலமான பரப்புரைகளை செய்து வந்தார்கள். அதனால் தமிழர்கள் நாத்திகவாதிகளின் கூற்றை ஏற்கத் தயாராக இல்லை என்பதே உண்மை. தமிழர் பண்பாட்டை திட்டமிட்டு அழித்த ஆரியர்களும் திராவிடர்களும் தீபாவளி குறித்து தங்களுக்குள் சண்டையிட்டு வந்துள்ளதை தமிழர்கள் பார்த்து வந்துள்ளோம். இவர்கள் சண்டையில் தமிழர்களின் வரலாறு மறைக்கப்பட்டது தான் உண்மை.

இனி வரும் காலங்களில் தீப ஒளி நாளின் வரலாற்று பின்புலத்தை தெரிந்து கொண்டு வீட்டினில் தீபம் ஏற்றி , இயற்கை ஒளி தான் அண்டங்களை இயக்குகிறது என்று கூறிய வள்ளலாரின் கூற்றுக்கு இணங்க தமிழர்கள் அனைவரும் பட்டாசுகள் வெடிகள் இல்லாத தீப ஒளி நாளை கொண்டாட முன்வர வேண்டும். பண்டைய காலம் போல வீட்டினில் விளக்கேற்றி இருள் அகன்று போக கொண்டாட வேண்டும்.  ஆரிய மதக் கட்டுக் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் . திராவிடத்தின் நாற்றம் பிடித்த நாத்திக கொள்கைகளை புறந்தள்ளுவோம். தீபஒளி நாள் என்பது தமிழர்கள் உலகிற்கு கொடுத்த கொடை தான் என்பதை எல்லோருக்கும் அறிவிப்போம்.

ஒருவனே டெலுங்கு,கன்னடம், மலையாளத்தில் படிக்க வேண்டுமென தமிழகத்தில் மொழி உரிமை கோருகிறான்,

1956ல் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டபோது தமிழர் நிலத்தை தன் நிலம் என பறித்துச் சென்றான்,

அதற்கு அவன் சொன்ன காரணம் அந்நிலப்பகுதியில் தன்னினம் பெரும்பான்மையாக உள்ளது ஆகவே அஃது தம் நிலப்பரப்பு என்றான்,

ஆம் இங்கு ஆரிய-தீராவிட அக்கப்போர் நடத்தியபோது அரவம்படாமல் தம்மவரை குடியேற்றி பறித்துச் சென்றான்,

இதனால் அன்று பறிபோன நிலப்பரப்பு 70,000 சதுர கி.மீட்டர் ஆகும் இதில் முக்கிய நீராதார நிலைகள் உள்ளடங்கும்,

தற்பொழுது மாநில சுயாட்சியில் கூட்டாட்சி முறையை திணித்து தமிழகத்தை கூட்டாட்சி தத்துவத்தின் படி ஆளவே,

இந்த மொழி உரிமை ,இன்று மொழி உரிமை நாளை அதிகாரத்துவத்துடன் ஆளும் உரிமை பின்னாளில் மண்ணுரிமைனு நீளும்,

ஏற்கனவே கோவை,கன்னியாகுமரி, நாகர்கோவில்,ஒசூர், கிருட்டிணகிரி, சென்னைனு இக்கும்பல் ஆக்ரமித்துள்ளது,

தற்பொழுது இட ஒதுக்கீட்டில் பங்கீடு வைத்துள்ள இக்கும்பல் ஏது மொழி படித்தாலும் வேலைவாய்ப்பு உண்டு,

தமிழகத்தை வேட்டைக்காடாக்கி தமிழரையெல்லாம் வேட்டையாட துணியும் இந்த அநாகரீக கும்பலை இங்கு உரிமைக்கொடுத்து குத்தவைப்பது,

தமிழினம் தமது அழிவிற்கு தாமே நாள் குறிப்பதற்குச் சமம் என்பதை உணரவேண்டும்.
[vuukle-powerbar-top]

Recent Post