Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மழைக்கான பதிவு !

இன்று சென்னை நகரம் முழுவதும் நீரால் சூழப் பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீர் வீடுகளில் புகுந்துள்ளது. மழையால் இன்று பல உயிர்கள் துன்பப்பட்டாலும் , இம்மழை இல்லாவிடில்  நாளை மக்களுக்கு குடிக்க நீர் கிடைக்காது என்பதை நாம் நினைவில் நிறுத்த தவறக் கூடாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மழையின் ஆதிக்கத் தன்மையை குறித்து வள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார் .

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. - குறள் 15

மழைக்கு உயிர்களை ஆட்டிப்படைக்கும் தன்மை உள்ளது. உயிர்களை கெடுப்பதும் பிறகு  அவ்வுயிர்களுக்கு கொடுப்பதும் எல்லாம் மழை தான் இவ்வளவு சிறப்பாக உலகில் வேறு யாரும் கூறியது இல்லை.

இயற்கையானது இந்த மண்ணுக்கு மக்களுக்கு என்ன தேவை என்று கருதியே கொடுக்கிறது பின்னர் எடுக்கிறது. மழை வரும் போது மழை நீரை சேமிப்பதும், நீரை முறையாக குடியிருப்புகளில் இருந்தும் வெளியேற்றுவதும் மனிதர்களின்  முயற்சியாகும். அரசின் பங்களிப்பும் இதில் பெரிதளவில் துணைபுரிய வேண்டும். மழையை நாம் நொந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து மனித தரத்தில் நம்மால் முடிந்த வரை மழையின் தாக்கத்திலிருந்து நம்மையும் நம்மை சுற்றி  இருப்போரையும் பாதுகாக்க முயல்வோம்.

கடலூரில் மழையால் இறந்து போன குடும்பங்களுக்கு நம் ஆழ்ந்த வருத்தங்கள். அவர்களுக்கு அரசின் உதவிகள் உடனடியாக சென்று சேர நாம் தொடர்ந்து அரசுக்கு அழுத்தங்களை கொடுப்போம்.


[vuukle-powerbar-top]

Recent Post