Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தேமுதிக தலைவர் விஜயகாந்து தமிழர் அடையாளத்தை பயன்படுத்தி படத் தலைப்பை வைத்திருப்பது தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றும் செயல் !

தேமுதிக வின் தலைவர் விஜயகாந்த் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். படங்களில் தான் ஒரு தமிழர் என்றே கூறியும் வந்துள்ளார் . எனினும் அரசியலுக்கு அவர் வந்த பிறகு அவர் தமிழர் அல்ல , அவர் ஒரு தெலுங்கர் என்பது அனைவருக்கும் தெரியவந்தது. தான் தொடங்கிய கட்சிக்கு கூட அவர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்  என்று தான் பெயர் வைத்தார். முற்போக்கு தமிழர் கட்சி என்று பெயர் வைக்கவில்லை. மேலும் விஜயகாந்து வீட்டிலும் அவர் தாய் மொழியான தெலுங்கில் தான் பேசி வருவதாக செய்திகள் பதிவாகி உள்ளது. அவரது மனைவி தேர்தல் நேரத்தில் தெலுங்கு மொழி பேசி வாக்கு சேகரித்துள்ளார். இன்னும் தெலுங்கு அடையாளத்தை தக்க வைத்து தான் வருகிறார் விஜயகாந்து.
அடிப்படையில் அவர் ஒரு கம்மா நாயுடு என்ற தெலுங்கு இனக் குழுவை சார்ந்தவர் என்று தெலுங்கு கம்மா நாயுடு மக்கள் காணொளி தொகுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் அவர் ஒரு தெலுங்கர் தான் என தமிழர்கள் பலரும் இப்போது அறிந்து கொண்டனர்.

தமிழ்நாட்டை ஒரு தமிழர் தான் இனி ஆள வேண்டும் என்ற முழக்கம் வலுப்பெற்று வரும் இவ்வேளையில் விஜயகாந்து தன்னுடைய புதிய படத்தின் தலைப்பை "தமிழன் என்று சொல்"   என்று வைத்திருப்பது திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றும் செயலாகும். இப்படத்தில் விஜயகாந்தின் மகனே கதாநாயனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கர்கள் தங்கள் இனத்தின் அடையாளத்தை மறைத்து தமிழகத்தில் இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்து வருகின்றனர். இதனால் தமிழும் தமிழர் அடையாளமும் தமிழகத்தில் இன்றளவிலும் சிதைக்கப்பட்டு வருகிறது. தமிழ் மொழியை இழித்தும் பழித்தும் பேசி வந்த தெலுங்கை  தாய் மொழியாகக் கொண்ட ஈவே ராமசாமி கூட தன்னை தமிழன் என்று சொல்லாமல் தன்னை கன்னடன் என்றே கூறி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட, தெலுங்கு மொழியை அடையாளத்தை  இன்றளவும் விட்டுக் கொடுக்காத விஜயகாந்து 'தமிழன் என்று சொல்' என்ற படத் தலைப்பை பயன்படுத்துவது கண்டனத்திற்கு உரியது. இப்படத்தை பார்க்கும் தமிழர்கள் பலரும் விஜயகாந்தை தமிழர் என்று நினைக்கும் விதமாக இப்படம் அமையும். தெலுங்கர்கள் தங்கள் இனத்தின் அடையாளத்தை மாற்றாமல் தாங்கள் தெலுங்கர்கள் என்ற உண்மையான அடையாளத்துடன் தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை வைக்கிறது. விஜயகாந்து தமிழர்களை  ஏமாற்றும் இத்தகைய நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது.


இப்படிப்பட்ட ஆளுநரும் தேவையில்லை
ஆளுநர் பதவியும் தேவையில்லை

[vuukle-powerbar-top]

Recent Post