Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழர் அடையாளம் இல்லாத தமிழர் புதுமனை புகுவிழா !

இன்று எங்கள் குடியிருப்பு பகுதியில் புதுமனை புகுவிழா நடந்தது. எங்களையும் அழைத்திருந்தனர். ஒரு தமிழ்க் குடும்பம் புதிதாக வீடு கட்டி குடி வருகிறார்கள். இதில் வருத்தம் என்னவெனில், புதுமனை விழாவிற்கு ஆங்கிலத்தில் அழைப்பு அச்சிட்டு கொடுத்தார்கள். வீட்டின் பெயரும் 'VILLA' என்று ஆங்கிலத்தில் தான் முகப்பில் இருந்தது. காலை முதல் தமிழ் மந்திரங்கள் எதுவும் முழங்கவில்லை. பிராமணர்களை வைத்து சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டன. தமிழர்கள் நடத்தும் இவ்விழாவில் எங்கும் தமிழர் அடையாளம் இல்லை என்பது தான் வேதனை.

திராவிடர்களும் ஆரியர்களும் தமிழர் அடையாளத்தை மறைக்க, சிதைக்க பல வேலைகளை செய்துள்ளனர். வீட்டின் இல்ல நிகழ்ச்சி கூட தமிழர் முறைப்படி செய்ய முடிவதில்லை. இங்குள்ள மலையாளிகள் வீடுகள் கேரளா அடையாளத்துடன் கட்டப்பட்டுள்ளது. மார்வாடி மக்கள் அவர்கள் மொழியில் வீட்டிற்கு பெயர் வைத்துள்ளனர். ஆனால் தமிழர்கள் மட்டும் தங்கள் அடையாளத்தை மறந்து ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளனர். கடந்த ஐம்பது ஆண்டுகால திராவிடத்தின் தாக்கத்தால் தமிழன் தன் மொழியை , இன அடையாளத்தை எந்த அளவிற்கு இழந்துள்ளான் என்பதிற்கு இத்தகைய நிகழ்வுகளே சான்று.

தமிழர்கள் தயவு செய்து தங்கள் இல்லத்திற்கு தமிழ் மொழியில் பெருமையுடன் பெயர் சூட்டுங்கள். இல்ல விழாவின் அழைப்பிதழை தமிழில் பெருமையுடன் அச்சிடுங்கள். தமிழ் ஓதுவார்களை வைத்து தமிழ் மந்திரங்கள் முழங்க  இல்ல சடங்குகளை நடத்துங்கள். அப்போது தான் தமிழும் சிறக்கும் தமிழனும் சிறந்து விளங்குவான். வருத்ததுடன் பதிவு seik
[vuukle-powerbar-top]

Recent Post