Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திராவிடர்களின் கூடாரமாக மாறுகிறதா பாஜக ? நடிகர் நெப்போலியன் பாஜகவின் துணைத் தலைவர் ஆனார் !

இத்தனை ஆண்டுகள் திராவிட இயக்கம் , கட்சிகள் என்று நடத்தி தமிழர்களை ஆதிக்கம் செய்து வந்த தெலுங்கு திராவிடர்கள் இப்போது புதிய முகமுடியை அணியத் தொடங்கி விட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் திராவிட கருத்தியல் மற்றும் ஈவேரா பிம்பம் உடையத் தொடங்கியதும் தெலுங்கர்கள் தங்களுக்கான அடுத்த பதுங்கு குழியை நோக்கி புறப்பட்டு உள்ளனர். இனி திராவிட கட்சியில் இருந்தால் பயனளிக்காது என்று கருதும் தெலுங்கர்கள் ஆரிய மதக் கட்சியான பாஜகவில் நேரடியாக இணையத் தொடங்கி விட்டனர் என்பதை தெலுங்கரான நெப்போலியன் பாஜகவில் பதவி ஏற்றுள்ளது காட்டுகிறது. திராவிடத் தந்தை வந்த பிறகு தான் தமிழர்கள் ஆரியத்தை எதிர்த்தனர் என்ற தவறான பரப்புரையை திராவிடர்கள் செய்து வந்தனர். ஆனால் உண்மையில் தமிழர்கள் மட்டுமே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக ஆரியத்தை எதிர்த்து வந்துள்ளனர். திராவிடக் கட்சியில் இருந்த தெலுங்கர்கள் இப்போது ஏன் ஆரியக் கட்சியில் இணைய வேண்டும் ? அதற்கான தேவை என்ன என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆரியமும் திராவிடமும் ஒன்று தான் என்று பல காலாமாக தமிழர்கள் கூறிக் கொண்டு தான் வருகிறோம் . அதை உறுதி செய்யும் விதமாக திராவிடத் தெலுங்கர்கள் பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர் . திராவிடர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடுத்து பாஜக கட்சியினர்  ஈவேரா விற்கு பாராட்டு விழா எடுத்தாலும் வியப்பதற்கு இல்லை. ஏற்கனவே தமிழக பாஜகவை பாஜகவின் மாநில பொறுப்பாளர் முரளிதர ராவ் என்னும் தெலுங்கர் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தெலுங்கினத்தை ஒன்றிணைக்க சென்னையில் தெலுங்கு மாநாடு நடத்தியதும் இவரே . இந்நிலையில் பல திரைப்பட நடிகர்களும் தெலுங்கர்களும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இடம் பிடித்திருப்பது பாஜக தெலுங்கர்களின் அடுத்த கூடாராமாக மாறி வருகிறது என்பதை காட்டுகிறது.

தெலுங்கு திராவிடர்களின் ஆதிக்கம் திராவிட கட்சிகளின் வழியே வந்தாலும் சரி பாஜக காங்கிரஸ் கட்சிகளின் வழியே வந்தாலும் சரி , தமிழர்கள் நாம் விழிப்புடன் எதிர்க்க வேண்டும். தமிழ் நாட்டை திராவிடர்களிடம் இருந்து பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.



[vuukle-powerbar-top]

Recent Post