Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சல்லிக்கட்டு மீதான தடையை  இந்திய அரசு தடையை நீக்காவிட்டாலும் நாங்கள் நடத்துவோம் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

5000  ஆண்டுகளுக்கு மேலாக சல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல் விளையாட்டை தமிழர்கள் நடத்தி வருகிறார்கள். தங்களுடைய காளைகளை இதற்காகவே சிறப்பாக பராமரித்து தமிழர்கள் வளர்த்தும் வருகிறார்கள். சல்லிக்கட்டு விளையாட்டை பெருவாரியான தமிழர்கள் காலம் காலமாக ரசித்து விளையாடி மகிழ்கிறார்கள். இவ்விளையாட்டில் பங்குபெறும் காளைகளை தங்கள் குடும்ப உறுப்பினர் போலவே கருதி வருகிறார்கள் காளைகளின் உரிமையாளர்கள். தமிழர்கள் பெரு மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து பங்கெடுத்து வரும் இந்த சல்லிகட்டு விழாவை திட்டமிட்டு பீட்டா என்ற பன்னாட்டு விலங்கு நல அமைப்பு தடை செய்ய கோரியது. இதற்கான தடையை உச்சநீதிமன்றம் சென்று உறுதி செய்தார்கள் விலங்கு நல அமைப்பினர். விலங்குகளுக்கு எந்த ஒரு துன்புறுத்தலும் இல்லை என்று தமிழக அரசு வாதம் முன்வைத்தாலும் இந்திய அரசு இன்னும் சல்லிக்கட்டுக்கு மீதான தடையை விலக்கவில்லை. இது தமிழினத்திற்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது . சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்து 5000  ஆண்டுகளாக தமிழர்கள் காத்து வந்த இந்த விளையாட்டுப் போட்டியை இந்திய அரசு தடுப்பது அநீதியானது மட்டுமல்லாமல் தமிழர்களின் உரிமையில் தலையிடுவது போலாகும். இதை தமிழ் மக்கள் ஒருக்காலும் ஏற்க முடியாது. 2015 ஆம் ஆண்டு சல்லிக் கட்டு போட்டிகள் நடத்த முடியாமல் செய்தது இந்திய அரசு. இந்திய அரசுக்கு துணை போனது தமிழக அரசு.

இம்முறை இப்படியான அநீதியை நாங்கள் ஏற்க முடியாது. தமிழர்களின் பண்பாட்டு உரிமையில் தலையிட எந்த அரசுக்கும் உரிமை இல்லை. வரும் 2016 ஆண்டில் தை மாதத்தில் நடக்க இருக்கும் சல்லிக்கட்டு போட்டிகளை இந்திய அரசு தடை செய்யக் கூடாது. தமிழக அரசும் இந்திய அரசின் இந்த தமிழர் விரோத கொள்கைக்கு துணை போகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கிறது. மேலும் இந்திய அரசு சல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை திரட்டி வரும் ஆண்டில் போட்டிகளை நடத்தும் என்பதை இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். 
[vuukle-powerbar-top]

Recent Post