Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நம் இழப்புகளை தெரிவிப்போம் !
தமிழகப் பேரிடர் இழப்புகள் - Tamil Nadu Disaster Losses

தமிழக மக்களே ! வரலாறு காணாத அளவிற்கு தமிழகம் மழை வெள்ளத்தை சந்தித்து உள்ளது. யாரும் எதிர்ப்பார்க்காத இந்த பேரிடரில் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை, பொருட்களை இழந்துள்ளனர். வீடு, வாகனம், அறைக்கலன்கள், மின்னணு சாதனங்கள், கணினிகள், புத்தகங்கள், நகைகள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள் என பலவற்றையும் இழந்துள்ளனர். இதையெல்லாம் எப்படி ஈடு செய்யப் போகின்றனர்? அரசு எப்படியான நிதி உதவிகள் செய்யப் போகிறது?  நடுவண் அரசிடம் இருந்து பெறப்படும் நிதி சாலைகளை சீரமைக்கவே போதாது. இந்நிலையில் தனிமனிதர்கள் சந்தித்த இழப்புகளுக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது. ஒரு தனி மனிதனின் இழப்பில் 25 விழுக்காடு தொகையையாவது அரசு தர வேண்டுமா இல்லையா ?  இந்த அரசு தனி மனிதனின் இழப்பை அறியுமா ? வெறும் 5000, 10000 ரூபாய் கொடுத்து விட்டால் அது உண்மையான இழப்பீடு ஆகுமா ?

தனி மனிதர்களின் உழைப்பு, குடும்பத்தின் உழைப்பு எல்லாம் சில நாட்களில் இயற்கை சீற்றத்தால் காணமல் போனது. இவ்வாறு பாதிப்படைந்த மக்கள் தாங்கள் எவ்வளவு இழந்துள்ளோம் என்பதை பொதுவெளியில் பகிர வேண்டும் என்பதற்கு இந்த முகநூல் பக்கத்தை உருவாக்கி உள்ளோம். இப்பக்கத்தின் மூலமாக தனி மனிதர்கள் , குடும்பங்கள் எவ்வளவு இழந்துள்ளனர் என்பதை மக்களுக்கு , அரசுக்கு தெரியப் படுத்த வேண்டும். யாரும் இங்கு தயவு செய்து உதவிகள் கோர வேண்டாம். ஒவ்வொரு தமிழ்நாட்டின் குடிமகனும் தான் இழந்தவற்றை பற்றிய விவரங்களை கூறினால் போதும் . அல்லது தங்களிடம் உள்ள படங்களை இங்கு இணைக்கவும். உங்கள் பெயர் , முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றோடு இழப்பு விவரங்களை இப்பக்கத்தில் பகிரவும். இதன் மூலம் அரசு மக்களுக்கான நேர்மையான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறும். மக்கள் மீதான வரிச்சுமையை நடுவண் அரசும் மாநில அரசும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெறும்.

https://www.facebook.com/groups/103147063390637/

[vuukle-powerbar-top]

Recent Post