Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஊடகவியலாளர் செய்தி : 

திருவள்ளுவர் நாளை முன்னிட்டு 1330 அடி
திருக்குறள் அச்சிட்டு உலக சாதனை படைக்க உள்ளோம். ஊடகவியலாளர்கள் நேரில் வர அழைப்பு !  

சனவரி 10 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து உலகின் மிக நீண்ட 1330 அடி திருக்குறள் பதிப்பை சென்னை மெரீனா கடற்கரையில் வெளியிடுகிறது. இதுவரை இவ்வாறன சாதனை வரலாற்றில் நடந்ததில்லை. சென்ற ஆண்டு 400 அடி நீளமுள்ள திருக்குறள் பதிப்பை நாங்கள் வெளியிட்டோம். அதை முறியடிக்கும் விதத்தில் இந்த ஆண்டு 1330 அடி திருக்குறள் பதிப்பை வெளியிட்டு உலக சாதனையை நிகழ்த்த உள்ளோம். இந்த சாதனையை கின்னஸ் நிறுவனத்திற்கும் அனுப்பி கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. 

உலகின் மிகச் சிறந்த மெய்யியல், நீதி, சமூகவியல், அரசியல், இல்லறம்,    மற்றும் வாழ்வியல் நூலான திருக்குறளை உலகில் உள்ள அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். திருக்குறள் காட்டிய நெறிப்படி தனிமனிதர்கள் மட்டுமின்றி உலக அரசுகளும் பின்பற்றி நல்லதோர் உலகை படைக்க உறுதி பூணவேண்டும். ஒப்பற்ற திருக்குறள் பல பெருமைகளை உள்ளடக்கி உள்ளது. இது தமிழர்களின்  தாய் மொழியான தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதை நினைத்து  தமிழர்கள் பெருமைப்படுவதோடு நின்று விடாமல் தங்கள் குழந்தைகளுக்கு மறவாமல் திருக்குறள் நெறியை போதிக்க உலக தமிழர்கள் முன்வர வேண்டும். உலகில் உள்ள எந்த இனத்தவரும், நாட்டவரும்  திருக்குறளை பின்பற்றி தங்கள் வாழ்வில் பயன்பெறலாம். இதை உலகிற்கு எடுத்துக் கூறும் விதமாக உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பை பெருமையுடன் வெளியிடுகிறோம். 

காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், இணைய ஊடகங்கள் என அனைத்து விதமான ஊடகங்களும் இந்த திருக்குறள் உலக சாதனை நிகழ்ச்சியை நேரில் வந்து பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.  

இந்நிகழ்வில் மூன்று சாதனைகள் நடத்த உள்ளோம். 

1.1330 நீளமுள்ள திருக்குறள் பதிப்பு 
2. உலகின் மிகப்பெரிய (அதிக எடை கொண்ட திருக்குறள் புத்தக வடிவில் 
3. மிகப்பெரிய திருவள்ளுவர் திருவுருவப்படம். 

நன்றி 
தமிழர் பண்பாட்டு நடுவம் 
தமிழ் ஆன்றோர் அவை 
தொடர்புக்கு 9445134027, 7200073022


[vuukle-powerbar-top]

Recent Post