Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

2016 ஆங்கிலப் புத்தாண்டு தமிழர்களுக்கு எழுச்சிமிக்க ஆண்டாக அமையட்டும் !

2015 ஆம் ஆண்டு தமிழர்கள் அரசியல் , கருத்தியல் ரீதியாக எழுச்சி பெற்றனர். தமிழகத்தை தமிழரே ஆள வேண்டும் என்றும் திராவிடர்கள் இனியும் தமிழர்கள் மீது ஆளுமை செலுத்தக் கூடாது என்ற கருத்தியல் வேரூன்றியது. இந்திய அரசும் தமிழக அரசும் தொடர்ந்து தமிழர் விரோத செயல்களையே செய்து  வருகிறது என்பதை அம்பலப்படுத்திய ஆண்டு 2015.

தமிழகத்தில் மதுவிற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்ததும் சசிபெருமாள் ஐயா மரணடைந்ததும் , மாணவர்கள் மதுக் கடைகளை அடித்து நொறுக்கியதும் 2015 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். தமிழர் உரிமைகள் ஒவ்வொன்றாக இந்திய அரசு பறித்ததும், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டதும், சல்லிக்கட்டு மீதான தடையை நீக்காமல் பார்த்துக் கொண்டதும், எங்கும் இந்தியை திணித்ததும்  இந்திய அரசின் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தியது.

2016 ஆண்டு தமிழர்களுக்கு பெரும் பணி காத்துக்கிடக்கிறது. பெருமழையால் தமிழகம் பெரும் பாதிப்புக்கு உள்ளானதால் அதிலிருந்து தமிழர்கள் மீண்டுவர வேண்டிய நிலையம் உள்ளது. அதேநேரம் தமிழகத்தை நாசமாக்கிய  திராவிடக் கட்சிகள் மீண்டும் தமிழக ஆட்சியை பிடிக்கும் தேர்தலும் இந்த ஆண்டு வரவுள்ளது . தமிழர் விரோத திராவிடக் கட்சிகளை வீழ்த்தாமல் தமிழர்களுக்கு விடிவில்லை என்ற செய்தியை தமிழகமெங்கும் கொண்டு செல்லும் கடமையும் தமிழர்களுக்கு உள்ளது.

2016 ஆங்கில புத்தாண்டில் தமிழர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன், அறிவிப்பூர்வமாகவும் , நேர்த்தியாவும், ஊக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்பதை நினைவு படுத்துகிறோம். தமிழர்கள் தங்கள் அரசியல், கல்வி,. மொழி , பண்பாட்டு உரிமைகளை மீட்கும் ஆண்டாக 2016 அமையட்டும் . ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு நம் வாழ்த்துகள். தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கவும் பலமடங்கு சிறப்பாக கொண்டாடவும் நாம் அணியமாவோம்.


[vuukle-powerbar-top]

Recent Post