Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தொலைக்காட்சி நிருபர் கொடுத்த அதிர்ச்சி !

திருமலை நாயக்கருக்கு அரசு விழா என்பதை எதிர்த்து நாம் பதிவிட்டதை தொடர்ந்து ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தினர் என்னிடம் கருத்துக் கேட்க என் இருப்பிடம் வந்தனர். அப்போது திருமலை நாயக்கர் ஆட்சி எப்படி தொடங்கியது, எவ்வாறு ஆட்சி நடந்தது, தமிழ் எவ்வாறு சிதைக்கப்பட்டது, தெலுங்கர்கள் எவ்வாறு உயர் நிலைக்கு வந்தனர் போன்ற செய்திகளை பேட்டி எடுத்த நிருபரிடம் எடுத்துக் கூறினேன். பின்னர் நிருபர் பெரியார் கூட நாயக்கர் தானே , அவர் தமிழர்களுக்கு எவ்வளவு நன்மை செய்துள்ளார் , அப்படி இருந்து ஏன்  நீங்கள் நாயக்கரை எதிர்க்க வேண்டும் என்று கேட்டார். திருமலை   நாயக்கர் வழித் தோன்றல் தான் ஈவெரா என்பதையும் எப்படி அவர் தமிழினத்தை திட்டமிட்டு இழிவு செய்தார் என்பதையும் ஈவெராவின் தமிழினப் பகை எப்படி செயப்பட்டது என்பதையும் அவரிடம் விளக்கினேன். மேலும் நாயக்கர் ஆட்சியின் நீட்சியே இப்போது தமிழகம் இன்னும் தெலுங்கர்களின் அரசியல் ஆதிக்கத்தில் இருந்து கொண்டு இருக்கிறது என்பதையும் கூறினேன்.

எல்லாவற்றையும் பதிவு செய்து முடித்த பின்னர் , இறுதியில் அவர் கூறியது அதிர்ச்சி அளித்தது. இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை . அவர் கூறியது தன்னுடைய தாய் மொழியும் தெலுங்கு தான் என்றும் தமிழகத்தில் 27 % தெலுங்கர்கள் உள்ளனர் என்றும் கூறினார். அவரது பூர்வீகம் தமிழகம் தான் என்றும் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் ஆட்சியில் தமிழர்கள் பலரும் தெலுங்கர்களாக இன மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் அப்படித் தான் தன்னுடைய முன்னோர்கள் தெலுங்கராக மாற்றப்பட்டனர் என்றும் கூறினார். உண்மையில் இது அதிர்ச்சியாகவே உள்ளது. இப்போது தமிழகத்தில் எல்லா உயர் பதவிகளிலும் தெலுங்கர்களே இருப்பது தற்செயல் அல்ல . இது பல காலமாக தமிழகத்தில் நடைபெறும் தெலுங்கு இனக்கட்டமைப்பே என்பதை நாம்  உணர்தல் வேண்டும். தெலுங்கர்களுக்கு எதிரான அதிகாரப் போரில் தமிழர்கள் வெல்வது அவ்வளவு எளிதல்ல என்பதை மட்டும் நாம் உணர்தல் வேண்டும். திருமலை நாயக்கரின் அடையாளத்தை வீழ்த்தாமல் தமிழர்களின் அடையாளத்தை நிறுவ முடியாது.




[vuukle-powerbar-top]

Recent Post