Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தடையை மீறி சல்லிக்கட்டு நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு நிபந்தனை பிணையில் வெளி வந்தோம்.

தமிழர் முன்னேற்றக் கழகம் அதியமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருமாள் தேவன், ராச்குமார் பழனிசாமி மற்றும் சிவகுமார் ஆகியோர் மீது பல பொய் வழக்குகள் போட்டு கைது செய்தனர் காவல்துறை

கைது செய்யப்பட்டு ஒரு மணி நேரத்தில் நம் வழக்கறிஞரை தொடர்பு கொள்ள காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இருப்பினும் 24 நான்கு மணி நேரத்திற்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாதவாறு பார்த்துக் கொண்டனர் காவல்துறை.  இறுதியில் நீதிபதியிடம் ஒப்பைடைத்த பின்னரே எங்களுக்கு வழக்கறிஞரை தொடர்பு கொள்ள அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் அரை மணி நேரத்தில் நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டோம்.

சிறைக்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது , நாங்கள் மட்டுமல்ல சிறையில் உள்ள 75 விழுக்காடு கைதிகள் பொய் வழக்குகள் கீழ் தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது. இது தான் இந்தியாவின் மக்களாட்சி அமைப்பு. யார் மீதும் எந்த வழக்கும் தொடுக்கலாம், சிறையில் அடைக்கலாம் என்ற சர்வதிகாரம் காவல்துறைக்கு அரசால் வழங்கப்பட்டு உள்ளது.இதன் காரணமாக பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் ஏராளம் ஏராளம். அனைத்தையும் விரிவாக தொடர்ந்து நாம் எழுதுவோம். பகிர்வோம்.

சிறையில் இருந்து வெளிவர உதவிய மறத்தமிழர் சேனை நண்பர் புதுமலர் பிரபாகரன், முத்துக் குமார் பாண்டியன், வழக்கறிஞர் குழு அனைவருக்கும் நன்றிகள். எங்களை பற்றி நலம் விசாரித்து பதிவுகள் பரிமாறிய முகநூல், கட்செவி நண்பர்கள், அனைத்து கட்சி, இயக்க நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. தமிழர் பண்பாட்டு மீட்சியில் தொடந்து நாம் இணைந்து செயல்படுவோம். நம் உரிமைகள் யாவையும் வென்றெடுப்போம்.

வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் ! சுடர்க தமிழர் நாடு !

   
[vuukle-powerbar-top]

Recent Post