Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழ்த் தேசிய  கூட்டமைப்பு   யாருடன்  கூட்டணி  அமைக்கும் ?

கடந்த  21/02/2016 ஞாயிறு அன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் திரு. அதியமான் அவர்களின்  தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது சில தீர்மானங்கள்  கூட்டமைப்பை  சேர்ந்த அனைவராலும்  ஏற்கப்பட்டது. அவற்றுள் முக்கியமான தீர்மானங்கள் வருமாறு...

1.    தமிழகத்தின்  ஆட்சியையும்  அதிகாரத்தையும்  தமிழை தாய் மொழியாக கொண்டவர்களே   கைப்பற்றி  ஆள்வது என்ற  இலக்குடன் தமிழ்  தேசிய கூட்டமைப்பு   எதிர்வரும்  சட்டமன்ற தேர்தலில்  போட்டிடுவது என ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

2. தேர்தலில் கூட்டணி  அமைத்து  போட்டியிடுவது தொடர்பான  தீர்மானம்.

அ) மொழிவாரி  மாநிலங்கள் பிரிவினைக்கு முன்னர், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா  ,கர்நாடகம் , ஒரிசா மற்றும்  மராட்டிய மாநிலங்களின் சில  பகுதிகள் சேர்ந்து  சென்னை இராசதானியாக (மெட்ராஸ் பிரசிடென்சி)  இருந்தபோது பின்பற்றப்பட்ட இட ஒதுக்கிட்டு பட்டியல்  எந்த மாற்றமின்றி தமிழ் நாட்டில்   இன்றுவரை அப்படியே  பின்பற்றப்படுகிறது.  எனவே  இந்த பட்டியலில் இருந்து இட ஒதுக்கீட்டு சலுகைகள் பெறும் பிற மாநில, பிற மொழிகளை சேர்ந்த சாதிகளை முற்றாக நீக்க வேண்டும்.

ஆ)  அதே  போல  19  வன்னிய உயிர்களை பலி கொடுத்து பெறப்பட்ட மிகவும்  பிற்படுத்தப்பட்டோர்  ( MBC ) பட்டியலிலிருந்தும் பிற மாநில பிற மொழி சாதிகளையும்  முற்றாக நீக்க வேண்டும்.

இ) தமிழை தாய் மொழியாக கொண்ட நகரத்தார் , சைவ வேளாளர், சைவ முதலியார், பிராமணர் (பார்ப்பனர்) உட்பட்ட முன்னேறிய  வகுப்பினர் என்று இது நாள் வரை இட ஒத்துக்கீட்டு சலுகை மறுக்கப்பட்ட அனைத்து  தமிழர் சாதிகளுக்கும் உரிய  இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

 ஈ ) தமிழை தாய் மொழியாக  கொண்ட  கிருத்துவர் இசுலாம் ஆன தமிழர் தமிழர்களுக்கும்  தற்போது உள்ள  இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரத்தை உரியவாறு  உயத்தி  தர வேண்டும்.
  
உ) அரசு பணிகளில் பிற மாநிலங்களில்  வாழும்  தமிழர்களுக்கும்  உரிய   இட ஒத்துக்கீடு  வழங்கி தமிழக  தேர்வாணைக்குழு  தேர்வுகளை  அவரவர் இருக்கும்  மாநிலங்களிலேயே  எழுத  வசதிகள் செய்து தர வேண்டும்.

ஊ) தமிழ் நாட்டுக்குள்  வாழும்  அருந்ததியர் , தோட்டி, குளுவர்  போன்ற ஒடுக்கப்பட்ட  தெலுங்கு  சாதிகளுக்கு   மட்டும் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு  ஏற்ப  இட  ஒதுக்கீடு  தனியாக  வழங்கப்பட வேண்டும். தமிழ் இன பட்டியல் சாதிகளுக்கான  18  விழுக்காட்டில் அவர்களுக்கு   உள் ஒதுக்கீடு  என்பதை ரத்து செய்ய வேண்டும்.

எ) இன்று  இருக்கின்ற 18  விழுக்காடு  முழுக்க முழுக்க  தமிழை தாய் மொழியாக கொண்ட  பட்டியல் சாதிகளுக்கு  மட்டுமே உரித்தானதாக்கப்பட வேண்டும்.

 மேற்கண்ட  தீர்மானங்களை   ஏற்றுக்கொண்டு  அவற்றை  தங்கள்  தேர்தல் அறிக்கையில் இடம்பெறச்செய்யும்  கட்சிகளோடு மட்டுமே  தமிழ் தேசிய  கூட்டமைப்பு கூட்டணி  அமைத்து இந்த சட்ட மன்ற  தேர்தலில்   போட்டியிடுவதென ஒருமனதாக   தீர்மானிக்கப்பட்டது.

அதியமான்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு


தமிழகத்திற்கு  என்று  எந்த பாடத்திட்டமும்  இருக்கக் கூடாது . அனைத்து பள்ளிகளிலும் இந்தி  அரசின் பாடதிட்டமே  இருக்க  வேண்டும்  - மெட்ரிக்  பள்ளி  சங்கத்  தலைவர்  கோரிக்கை  !

இப்படிப்பட்ட நபர்களை தனியார் பள்ளிகள் சங்கத் தலைவராக இருந்தால் தமிழகத்தில் தமிழும் இருக்காது  தமிழர்களும்  இருக்க மாட்டார்கள். ஏற்கனவே சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் எந்த மாநில மொழிகளும் இல்லை . இந்தியும் சமஸ்கிருத  மொழியும் தான்  கட்டாயப்பாடம் . மாநில பள்ளிகளில் மட்டுமே தாய் மொழிப் பாடம் இருக்கிறது . அதையும் இல்லாமல் செய்ய இப்படியான கோரிக்கையை வைக்கிறார் ஒரு இந்தி தேசப் பக்தர் . இப்படியான நபர்களை கல்வித்துறையில் இருந்து முழுவதும் நீக்க வேண்டும்.


[vuukle-powerbar-top]

Recent Post