Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

 நாம்  தமிழர்  கட்சியின்  மும்மொழித்  திட்டத்தை  ஏன்  தமிழர்கள்  எதிர்க்க  வேண்டும்  ?

நாம்  தமிழர்  கட்சி  ஆட்சிக்கு  வந்தால் அனைத்து அரசு பள்ளிகளிலும் மும்மொழிப் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துவோம்  என்று  அக்கட்சியின்  தலைவர்  சீமான்  கூறியுள்ளார் . அதாவது  அரசு பள்ளிகளில்  பயிற்று மொழி  தமிழ் , ஆங்கிலம் கட்டாய பாடம் . அடுத்தது மூன்றாவது விருப்ப பாடமாக  இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளும் பாடமாக கற்பிக்கப்படும். இது  தான் நாம் தமிழர் கட்சியின் மும்மொழிக் கொள்கை.

ஏற்கனவே தனியார் பள்ளி நிறுவனங்கள் அனைத்தும் மும்மொழிக் கொள்கையை தான் தமிழகத்தில் பின்பற்றுகின்றன . இதையே இதுவரை தமிழர்களால் ஒன்றும்  செய்ய முடியவில்லை . இந்நிலையில்  அரசு  பள்ளிகளில் மும்மொழித் பாடத் திட்டம் ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசை பொருத்தவரை இரண்டாம் மொழிப் போராட்டத்திற்கு பின்பு , பல தமிழர்கள் தங்கள் உயிரை மாய்த்து விட்ட நிலையில் தான் தமிழகத்திற்கு மட்டும் இருமொழிக் கொள்கை என்ற அனுமதியை இந்தி அரசு கொடுத்தது. இந்தியர்கள் அவர்கள் மாநிலங்களில் இதையே தான் பின்பற்றுகிறார்கள் . அதாவது தாய் மொழியான இந்தி மொழி பயிற்று மொழியாகவும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாகவும் தான் இந்தி மாநிலங்களில் உள்ளன. ஆனால்  இந்தி  அல்லாத  மாநிலங்களில் மட்டும் இந்தியை வலிந்து திணித்துள்ளது இந்தி அரசு .

சரி , நாம் தமிழர் கட்சி இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளும் விருப்ப பாடமாகத் தானே அரசு பள்ளிகளில் வைக்கச் சொல்கிறது , இதில் என்ன சிக்கல் என்று நீங்கள் கேட்கலாம். முதலில் அனைத்து மொழிகளையும் விருப்பபாடமாக வைக்க அரசு பள்ளிகளால் இயலாது . இந்தி, தெலுங்கு அல்லது மலையாளம் இதற்கு மேல் வேறு ஒரு மொழியை கூடுதலாக சேர்க்க இயலாது . காரணம் அனைத்து மொழிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்க இயலாது அப்படியே நியமித்தாலும் அனைத்து மொழிகளுக்கும் தேர்வாணையத்தில் பணியாளர்களை நியமிக்க முடியாது . இது நடைமுறை சிக்கல் . இப்போது இருக்கும் மூன்று விருப்பப்பாடங்களில் தமிழர்கள் எந்த மொழியை விருப்பப்பாடமாக எடுப்பார்கள் ? நிச்சயம் இந்தியைத் தான் விருப்பப்பாடமாக எடுப்பார்கள். அதாவது நூற்றுக்கு 99 விழுக்காடு இந்தியை தான் விருப்பப்பாடமாக மாணவர்கள் எடுப்பார்கள். இதற்கு காரணம் இந்தி அரசு தொடர்ந்து திணித்து வரும் இந்தித் திணிப்பு பொய்ப் பரப்புரைகளே ஆகும். இப்போது 99 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்கள் இந்தியை கற்றுக் கொள்வார்கள் எனில் இனி தமிழகத்தில் இந்தி பிரச்சார சபாவிற்கு வேலையே இல்லை என்ற நிலை வந்து விடும் . இந்தி பிரச்சார சபாவின் வேலையை அரசு பள்ளிகளே செய்து முடித்து விடுகிறதே ? இதைத் தான் இந்தி அரசு விரும்புகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தி அரசு தமிழக அரசிடம் கோருவது இந்தியை தமிழகப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்பது தான் . இக்கோரிக்கையை தமிழக அரசு இதுவரை ஏற்க்வில்லை. இதில் ஒரு நியாயமும் உள்ளது . இந்தி அரசு அதன் மாநிலங்களில் தமிழை இதுவரை விருப்பப்பாடமாக ஏற்கவில்லை. தமிழகம் மட்டும் ஏன் இந்தியை விருப்பப்பாடமாக ஏற்கவேண்டும்? இந்தியை வெளியில் சென்று மாணவர்கள் கற்றுக் கொள்ளட்டும் . தமிழகத்தில் வீதிக்கு வீதி இந்தி பயிற்று மையங்கள் உள்ளன. யாருக்கு இந்தி முக்கியமோ அவர்கள் அங்கு சென்று இந்தியை கற்றுக் கொள்ளட்டும் என்று தமிழக அரசு விட்டு விட்டது . உண்மையில் இந்தி இல்லாமல் வாழ முடியாது என்று கருதுபவர்கள்  பலரும் இந்தி பயிற்று மையங்களுக்கு சென்று இந்தி கற்றுக் கொள்கிறார்கள். அதனால் அரசு பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவையற்ற சுமை தமிழக மாணவர்களுக்கு மட்டும் இல்லை.

இதே நிலை தொடர வேண்டும் என்பதே தமிழ்த் தேசியர்களின் விருப்பமாக உள்ளது. இந்த நிலை நாம் எக்காரணம் கொண்டும் மாறவும் கூடாது. தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும் வரையாவது இந்த நிலை நிச்சயம் தொடர வேண்டும் . இல்லையெனில் தமிழகம் இன்னொரு இந்தியாவாக மாறும் அபாயம் உள்ளது . தமிழகத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் தமிழே பயிற்று மொழி ஆங்கிலம் ஒரு பாட மொழி . இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் கொள்கையாக இருக்க வேண்டும் . மும்மொழிக் கொள்கை இந்தி அரசின் மோசடிக் கொள்கை. இதை நாம் ஏற்க இயலாது.

- தமிழர் பண்பாட்டு நடுவம் .










[vuukle-powerbar-top]

Recent Post