Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சட்டமன்ற தேர்தல் - 2016

ஏன் பாஜக விற்கு தமிழர்கள்  வாக்களிக்கக்  கூடாது ?

தமிழ் மொழியை ஆட்சி  மொழியாக்க மறுப்பு
இந்தி சமஸ்கிருத மொழித் திணிப்பு
மாநில உரிமைகள் பறிப்பு
ஆதார் சட்டம் மூலமாக தனி மனிதர்கள் தகவல்கள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பு.
உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆதார் அட்டையை மக்களிடம் கட்டாயப் படுத்த குறுக்கு வழியில் சட்டம் இயற்றப்பட்டது.
ஜி.எஸ்.டி என்னும் நாடு தழுவிய பொது வரி விதிப்பு.
தூய்மை இந்தியா வரி விதிப்பு.
எரிபொருள் விலையை சர்வேதச விலைக்கு ஒத்தவாறு குறைக்க மறுப்பு
தமிழர்களின் பாரம்பரிய சல்லிக்கட்டுக்கு தடை விதிப்பு
தமிழ் மீனவர்கள் தாக்கப்பட்ட போதும் இலங்கை அரசுக்கு ஆதரவு
ஈழத்திற்கு எதிரான நிலைப்பாடு . ஈழத்திலும் இந்தித் திணிப்பு.
ஐ.நா. பாதுகாப்பு அவையில் இலங்கை அரசுக்கு ஆதரவு.
அனைத்து நாட்டு  இந்திய தூதரகத்திலும் இந்தி மட்டும் ஊக்குவிப்பு
சுங்கச்சாவடி கட்டணம்  உயர்வு
சிறு சேமிப்புக்கு வட்டி விகிதம் குறைப்பு
தமிழகத்தின் நீர்வள உரிமைகள் மறுப்பு
அணு மின் திட்டங்கள் தமிழகத்தில் திணிப்பு
நியூற்றினோ , மீத்தேன் கெயில் குழாய் பதிப்பு போன்ற நாசாகார திட்டங்களுக்கு அனுமதி
மாநிலங்களின் கல்வி பண்பாட்டு உரிமைகளில் மூக்கை நுழைப்பது.
மாநில அரசுகள் மூலாக அல்லாமல் நேரடியாக மக்களிடம் மானியம் வழங்கி கூட்டாச்சிக்கு முடிவு கட்டியது.
சமையல் எரிவாயு உருளைகள் பெற ஆதார் அட்டை கட்டாயப்படுத்தி மக்களை அலைக்கழிக்க வைப்பு.
நெடுஞ்சாலைகள் அனைத்தும் மாநிலங்கள் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கம்
தொடர்வண்டித் துறை நிதிநிலை அறிக்கை தமிழகம் புறக்கணிப்பு
நடுவண் அரசு வேலைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு
தமிழகத்தின் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு பிற மாநிலங்களுக்கு பகிர்வு
அதிக பட்ச வடவர்கள் தமிழகத்தில் குடியமர்வு
நடுவண் அரசு அலுவலங்களில், பள்ளிகளில்  தமிழ் மொழி புறக்கணிப்பு
தமிழக வானூர்தி , தொடர்வண்டிகளில் தமிழ் தெரியாதவர்களுக்கே வேலை வாய்ப்பு.
தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பாவிப்பு
இந்தி தெரிந்தவர்களே  இந்தியர்கள் என்ற பிம்பம் உருவாக்கம்.
தமிழன்னையை போற்றாமல் 'பாரத மாதா கீ ஜெய்' என்று முழங்கச் வற்புறுத்தல்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மறுப்பு
தமிழர் அடையாள மறுப்பு .
சமஸ்கிருத வழி இந்து அடையாளம் மட்டுமே அனைவரும் ஏற்க கட்டாயப்படுத்துவது .
சர்வதேச ஒக (யோகா)  நாளில் இந்திப் பாடலுக்கு மட்டுமே முக்கியத்துவம்.
நடுவண் அரசு திட்டங்கள் அனைத்தும் சமஸ்கிரத மொழியில் மட்டுமே பெயர் சூட்டுவது.
தமிழ் மொழியில் நடுவண் அரசு ஆவணங்கள் தர  மறுப்பு  .
தமிழர்களை வடக்கே ராணுவப் பணியில் அமர்த்தி அவர்களை துன்பப் படுத்துவது, மரணமடைய  துணை போவது.
இந்தி  ராணுவத்தினரை தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் அமர்த்தி தமிழர்களை துன்புறுத்துவது.
மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிப்பு.
நடுவண் அரசு பள்ளிகளின் மூலம் ஆரிய மனுதர்ம கொள்கை திணிப்பு. தமிழர் வரலாறு இரட்டடிப்பு.
தமிழர்களின் தொன்மையான ஆதிச்சநல்லூர் அகழ்வு ஆய்வை ஏற்க மறுப்பு. இந்தியாவின் தொன்மை நாகரீகம் தமிழர் நாகரீகம் என்பதை ஏற்க மறுப்பு,
தமிழகத்தின் பாஜக பொறுப்பாளர்கள் (முரளிதரராவ் போன்றவர்கள் ) தமிழர்கள் அல்லாதவர்களாகவே தேர்வு.

இப்படி பல வழிகளில் தமிழர்களின் அடையாளம், பண்பாடு, அரசியல், கல்வி, வரலாறு, வணிகம் போன்ற உரிமைகள்  பாஜக அரசால் பறிக்கப்பட்டு உள்ளன. அதனால் தமிழர்கள் எவரும் பாஜகவிற்கு எந்த சூழ்நிலையிலும் வாக்களிக்கக் கூடாது என்று  கேட்டுக் கொள்கிறோம்.
[vuukle-powerbar-top]

Recent Post