Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com


திருக்குறள் ஆய்வு மன்றம் திருக்குறள்  ஆர்வலர்கள்  மற்றும் ஆய்வாளர்களை வரவேற்கிறது !

தமிழர் பண்பாட்டு நடுவத்தின் முயற்சியாக அறிவியல் தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து திருக்குறள் ஆய்வு மன்றம் உருவாக்கப்பட உள்ளது. இது ஒரு புதிய முயற்சியாகும். இது வரை திருக்குறள் குறித்து பல்வேறு ஆய்வுகள் உலகம் முழுவதும் நடந்துள்ளன. திருக்குறள் ஆய்வுகள் மூலமாக பலரும் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர். ஆனால் இந்த ஆய்வுகள் மக்களிடம் பெரிதளவில் சென்று சேரவில்லை. மக்களிடம் சென்று சேராத ஆய்வுகள் மக்களை நெறிப்படுத்தவும் செய்யாது. அதனால் தான் இப்புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளோம்.

ஒரு வட்ட மேசை அமைத்து திருக்குறள் ஆர்வலர்கள் /  ஆய்வாளர்களை அமரச் செய்து திருக்குறள் குறித்த தங்கள் கருத்துகளை ஆய்வுகளை மன்றத்தில் வைக்கச் சொல்கிறோம். ஆய்வாளர்கள் வைக்கும் கருத்துகள் குறித்த விவாதம் நடைபெறும். ஆய்வறிக்கை குறித்து நெறியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டும். நெறியாளர்கள் மற்றும் பிற ஆய்வாளர்களின் ஒப்புதலோடு அந்த ஆய்வு திருக்குறள் மன்றத்தில் ஏற்கப்படும். ஆய்வுகள் நிறைவாக இல்லையெனில் அவைகள் முழுமையடையும்  வரை தற்காலிகமாக நிறுத்து வைக்கப்படும்.

ஆய்வரங்கம் முடிந்த பின்பு ஆய்வார்கள் தங்கள் ஆய்வுகளை ஐந்து நிமிடத்தில் ஒரு காணொளி பதிவாக வழங்க வேண்டும். சிறந்த ஒளித்திறன் கொண்ட இக்காணொளிகள் இணையத்தில் உலகத் தமிழர்களுக்காக ஏற்றப்படும். காணொளியில் ஆய்வார்கள் செய்த ஆய்வு அவர்கள் பெயருடன் வெளியிடப்படும். மீண்டும் இதே ஆய்வை வேறு ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது. ஆய்வின் இறுதியில் ஒரு காணொளி மற்றும் ஒரு சான்றிதழ் ஆய்வாளர்களுக்கு திருக்குறள் ஆய்வு மன்றத்தின் சார்பில் வழங்கப்படும். இந்த ஆய்வின் மூலமாக புதிய ஆய்வாளர்கள் வரலாற்றில் இடம் பிடிப்பதோடு இவர்களது ஆய்வுகள் ஒட்டு தமிழ் சமூகத்தையும் நன்மை அடையச் செய்யும் பெருமை அடையவும் செய்யும்.

திருக்குறள் தொடர்பில் எந்த தலைப்பில் வேண்டுமானலும்  ஆய்வுகள் செய்யலாம்.

திருக்குறள் பாயிரம், அதிகாரம், பால், இலக்கணம், தனிப்பட்ட ஒரு குறள், திருக்குறள் வரலாறு, திருக்குறள் காலம், திருக்குறள் கூறும் அறிவியல், மெய்யியல், மருத்துவம், குடும்பவியல் , அரசியல், நிதி மேலாண்மை, காதல் , கல்வி , தற்காலத்திற்கு தேவையான திட்டங்கள் , பொருளியல் , அறநெறி என்று எந்த தலைப்பில் வேண்டுமானலும் நாம்  ஆய்வு செய்யலாம். ஆய்வுகள் சுருக்கமாக 15 நிமிடத்திற்குள் ஆய்வு மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

திருக்குறள் ஆய்வாளர்கள் அனைவருக்கும்  திருக்குறள் ஆய்வாளர் என்ற சான்றிதழ் கிடைக்கும். அவர்களின் ஆய்வு வலைத் தொலைகாட்சியில் வெளியிடப்படும். திருக்குறள் மன்றத்தில்  அதிகபட்சமாக  பத்து பேர் வரை ஆய்வில் பங்கெடுக்கலாம். அதனால் ஆய்வில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். திருக்குறள் ஆய்வாளர்கள் பதிவுக்கட்டணமாக  ரூபாய் 300 செலுத்த வேண்டுகிறோம்  (அரங்கு, ஒளிப்படம், காணொளி காட்சி பதிவு, உணவு செலவுகள் உள்பட )

இடம் சென்னை , நாள் : 10/04/2016 நேரம் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை ஆய்வு அரங்கம் 6 மணி முதல் 8 மணி வரை காணொளி பதிவு . இரவு உணவு முடிந்ததும் நிறைவு. திருக்குறள் ஆய்வாளர்கள் / ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.  9445134027











[vuukle-powerbar-top]

Recent Post