Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருக்குறள் தமிழ் அறிஞர்களுக்கான நூல் அல்ல. அது பல்துறை அறிஞர்களுக்கான நூல் - திருக்குறள் ஆய்வு மன்றம். 

கடந்த ஞாயிறு அன்று திருக்குறள் ஆய்வு மன்றத்தின் முதல் ஒன்று கூடல் சென்னையில் நடைபெற்றது. ஆய்வு மன்றத்தில் கலந்து கொண்டவர்கள் திருக்குறள் சார்ந்த கருத்துக்களை முன்வைத்தனர். ஆய்வுக் குழுவில் கலந்து கொண்ட மருத்துவர் செம்மல் அவர்கள் திருக்குறள் தமிழ் ஆய்வாளர்களுக்கான நூல் அல்ல அது பல்துறை ஆய்வாளர்களுக்கான நூல் என்பதை ஆதராத்துடன் விளக்கினார். எடுத்துக்காட்டாக செவியின் முக்கியத்துவத்தை குறித்து வள்ளுவம் பேசுகிறது. இது தொடர்பான குறளை காது மூக்கு தொண்டை மருத்துவர் தான் ஆய்வு செய்ய முடியும் . இவர்கள் இக்குறளுக்கான ஆழமான ஆய்வுக் கருத்தை சமூகத்தில் வைக்க முடியும். இதே போல வணிக மேலாண்மை குறித்து வள்ளுவம் பேசுகிறது . இதையும் தமிழ் ஆசிரியர்கள் தான் ஆய்வு செய்து விளக்கம் அளிக்கிறார்கள். உண்மையில் தொழில் முனைவோர்கள் தான் இப்படியான குறட்பாக்களை ஆய்வு செய்திடல் வேண்டும். இவ்வாறு பல்வேறு துறை சார்ந்த கருத்துக்களை திருக்குறள் முன்வைக்கிறது . ஆனால் இவற்றையெல்லாம் ஆய்வு செய்ய பல்துறை நிபுணர்கள் முன்வரவில்லை என்பது தான் வேதனை என்று அழுத்தமாக பதிவு செய்தார் மருத்துவர் செம்மல் . 

திருக்குறள் மூலமாக ஒக ஆசனங்கள் பயில்வது குறித்து ஓக ஆசான் அசித்தார் அவர்கள் விளக்கினார். திருக்குறள் வழியே உடலை பேணும் கலைகளை குறித்து பேசினார் அசித்தார். 

அதன் பின்னர் பேசிய இராச்குமார் பழனிசாமி திருக்குறள் கூறும் உணவு முறைகளை பற்றி விளக்கினார் . மனித உடலில் ஏன் நோய்கள் வருகிறது என்பதை பற்றியும் அந்நோய்கள் வராமல் தடுப்பது பற்றியும் வந்த நோய்களை குணப்படுத்துவது பற்றியும் திருக்குறள் மூலமாக விளக்கினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணவு மேலாண்மை குறித்து எவ்வளவு சிறப்பாக வள்ளுவம் விளக்குகிறது என்பதை தக்க சான்றுகளுடன் விளக்கினார். இதற்கான ஆய்வு அறிக்கையை தயார் செய்து கொடுத்தார். பின்னர் இந்த ஆய்வை காணொளியாக பதிவு செய்யப்பட்டது. 

முதல் ஆய்வு மன்றம் திருக்குறள் சார்ந்த பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது வரை நாம் பார்க்காத கோணங்களை ஆய்வு மன்றம் அலசியுள்ளது. இத்தகைய ஆய்வுகள் வெளியே வந்தால் அது தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பெரும் பயனை தேடித் தரும் என்பதில் ஐயமில்லை. அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளில் இன்னும் ஆழமாக திருக்குறள் ஆய்வு செய்யப்படும். 


[vuukle-powerbar-top]

Recent Post