Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வின் மொழி மற்றும் கல்விக் கொள்கையில் எந்த வேறுபாடும் இல்லை .

தற்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தாய் மொழிக் கல்விக்கு முன்னுரிமை கொடுப்போம் என்று அறிவித்து உள்ளனர். அது எப்படி என்று விளக்கவில்லை. அடுத்த வரியிலேயே தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளனர். நவோதயா பள்ளிகள் என்பதே இந்தியை இந்தி தேசியத்தை திணிக்கும் பாடத்திட்டம் தான். நடுவண் அரசின் பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளில் திணிப்பது தான் நவோதயா பள்ளிகளின் வேலை. அப்படி இருக்கும் போது எப்படி தாய் மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்? புதுவையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண் அரசின் பாடத்திட்டத்தை புகுத்தி தமிழர் வரலாறே மாணவர்களுக்கு தெரியாமல் செய்தது புதுவை அரசு. இப்போது தமிழகத்திலும் அந்த நிலையை உருவாக்க முயல்கிறது காங்கிரஸ் கட்சி.

பாஜக தேர்தல் அறிக்கையிலும் நடுவண் அரசின் பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வருவோம் என்று அறிவித்து உள்ளது. தொடக்க கல்வியில் மட்டும் தமிழ் ஒரு கட்டாய பாடம் என்று அறிவித்து உள்ளது பாஜக. உண்மையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இதே நவோதயா பள்ளிகள் தான் தமிழகத்தில் தொடங்கப்படும் என்பதில் ஐயமில்லை. மேலும் பாஜக துணிச்சலாக இந்தியை மூன்றாம் பாடமாக அரசு பள்ளிகளில் திணிப்போம் என்று கூறியுள்ளது. இவ்வாறு கூறாமல் காங்கிரஸ் நவோதயா பள்ளிகள் மூலமாக இந்தியை திணிப்போம் என்று மறைமுகமாக கூறியுள்ளது .

எவ்வாறு இருப்பினும் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கல்வி மற்றும் மொழிக் கொள்கை என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான். எந்த வேறுபாடும் இல்லை. இவர்களை தமிழ்நாட்டை ஆளவிட்டால் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு இந்தி நாடாக மாறிவிடும். தமிழ்நாட்டு பிள்ளைகள் இந்தி நாட்டு பிள்ளைகளாக மாற்றப்படுவர் .

[vuukle-powerbar-top]

Recent Post