Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தற்சார்பு தமிழர் வணிகம் - அறிவியல் தமிழ் அறக்கட்டளை
இணைந்து  நடத்தும்

தமிழர் வணிக மேலாண்மை பயிலரங்கம்

* திருக்குறள் காட்டும் வணிக மேலாண்மை
* திருக்குறள் காட்டும் மனிதவள மேம்பாடு
* தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு பயிற்சி
* புதிய தொழில் தொடங்குவோருக்கு பரிந்துரை
* தமிழ் தொழில் அதிபர்களின் சிறப்புரை
* வணிகத்தில் வெற்றி பெரும் உளவியல்
* தொழில் முனைவோர்கள் வணிகப் பரிமாற்றம்
* பயிற்சி முடித்தவர்களுக்கு நிலை ஒன்று சான்றிதழ்


உணவு,
சான்றிதழ்  உட்பட
பதிவுக் கட்டணம் - ரூ 200 /-
நாள் : 8/05/2016 ஞாயிறு நேரம் : மாலை 5 - 8 மணி வரை
இடம் : சென்னை அண்ணாநகர் தொடர்புக்கு : 9445134027


தமிழர் வணிக மேலாண்மை !  தமிழர் வணிகத்தை ஊக்குவிக்க  ஒரு புதிய முயற்சி !

தமிழர்கள் இவ்வுலகில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல . இருப்பினும் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் பிற இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில் வணிகத்தில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை . வணிகத்தில் சிறக்காமல் தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை தக்க வைக்க இயலாது . புதிய தொழில் முனைவோர்கள் உருவாகாமல் ஒரு தேசத்திற்கு வளர்ச்சி என்பது சாத்தியமில்லை . அதனால் தமிழர்கள் தங்கள் வணிகத்தில் பல உத்திகளை கடைப்பிடித்து சர்வதேச சந்தையில் தங்கள் வணிகத்தை திறம்பட நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதை கருத்தில் வைத்தே தமிழர் வணிக மேலாண்மை பயிலரங்கத்தை உருவாக்கி உள்ளோம் .

இது பயிலரங்கம் மட்டுமல்ல , தொழில் முனைவோர்கள் , தொழில் அதிபர்களின் சந்திப்பும் ஆகும் .புதிய தொழில் தொடங்குவோரும் , ஏற்கனவே தொழில் செய்வோரும் தங்கள் கருத்துக்களை பரிமாறும் தளமாக இதை உருவாக்கி உள்ளோம் . தொழில் முனைவோர்கள் தங்கள் பொருட்களை இங்கு மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யலாம் , தொழில் அதிபர்களின் பரிந்துரையை பெறலாம் , மேலும் வணிகத்தில் சிறந்து விளங்க வள்ளுவர் கூறும் நெறிகள் என்ன என்பதை பற்றியும் நாம் விரிவாக அலச உள்ளோம் . இந்த பயிலரங்கத்தை பயன்படுத்துவோர் தங்கள் வணிகத்தில் மேலும் சிறந்து விளங்கலாம் . ஆகவே தமிழர்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்துமாறு வேண்டுகிறோம். முன்பதிவு அவசியம் தொடர்புக்கு : 9445134027


[vuukle-powerbar-top]

Recent Post