Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருக்குறள் காட்டும் வணிக மேலாண்மை மற்றும் தமிழர் தொழில் முனைவோர் சந்திப்பு இனிதே நடைபெற்றது !

கடந்த ஞாயிறு அன்று தமிழர் வணிக மேலாண்மை பயிலரங்கம் சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது. தற்சார்பு தமிழர் வணிகமும் அறிவியல் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து இந்த பயிலரங்கத்தை நடத்தியது. முகநூலில் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து தமிழர் தொழில் முனைவோர்கள் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இப்பயிலரங்கில் தற்சார்பு வணிகம் என்றால் என்ன என்பதை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழர்கள் எவ்வாறு பிற இனத்தவர்களை காட்டிலும் சிறப்பாக தொழில் செய்ய முடியம் என்பதை பற்றியும் தமிழர்களுக்கு இருக்கும் தடைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருக்குறள் காட்டும்  வணிக மேலாண்மை மற்றும் மனித வள மேம்பாடு குறித்த சிறப்பு வகுப்பு தொழில் முனைவோர்களுக்கு நடத்தப்பட்டது. சிறப்பான வணிகம் செய்யவும், தோல்விகளை தவிர்க்கவும் திருக்குறள் எவ்வாறு வணிகர்களுக்கு வழிகாட்டுகிறது என்பதை கணினிக் காட்சியாக எடுத்துரைத்தார் இராச்குமார் பழனிசாமி.

வணிக உளவியல் குறித்து மருத்துவர் செம்மல் அவர்கள் வகுப்பெடுத்தார். தமிழர்கள் தொழிலில் செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி தொழில் அதிபர் திரு. ஜீவானந்தம் எடுத்துரைத்தார் . மரபு சார் தமிழர் வணிகம் குறித்து உலகத் தமிழர் வணிக அவையத்தின் பொறுப்பாளர் திரு அசித்தர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மாதம் ஒரு முறை வணிக மேலாண்மை பயிலரங்கு மற்றும் வணிகர்கள் சந்திப்பை நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. வரும் காலத்தில் தமிழ் வணிகர்கள் இன்னும் சிறப்பாக ஒருங்கிணைந்து தமிழர் வணிகத்தை மேன்மேலும் செழுமை அடையச் செய்தல் வேண்டும்.







[vuukle-powerbar-top]

Recent Post