Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதிய தலைமுறை தேர்தல் கருத்துக் கணிப்பில் நாம்  தமிழர் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் நாம் தமிழர் கட்சிக்கு இது பெரும் வெற்றியாகும்.

புதிய தலைமுறை மண்டல வாரியாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. எல்லா மண்டலங்களிலும் நாம் தமிழர் கட்சிக்கு  2 - 3 % வாக்கு வங்கி இருப்பதாக இக்கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. நாம் கட்சி ஓரளவு தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை இக்கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தி உள்ளது. எல்லா இடங்களிலும் பாஜகவை விட நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் வாய்ப்புகளும் இருப்பதாகவே தெரிகிறது. இப்போது தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி தேசிய கட்சிகளை விட வாக்குகளை பெறுவது மிகப்பெரிய சாதனையாகும். இருப்பினும் திராவிடக் கட்சிகளை வீழ்த்த நாம் தமிழர் கட்சிக்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்றே தெரிகிறது.

முடிவு எதுவாக இருப்பினும் தமிழர் ஆட்சி இம்முறை வந்தாலும் வராவிட்டாலும் இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கருத்தியலின் தாக்கம் நிச்சயம் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக கூற முடிகிறது. தமிழ்த் தேசிய அரசியல் காலம் கடந்தாலும் வெல்லும் என்பதைத் தான் இக்கருத்துக் கணிப்புகள் கூறும் செய்தியாக உள்ளது.


[vuukle-powerbar-top]

Recent Post