Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் மீண்டும் தேர்தல் ஒத்தி வைப்பு

தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி அங்கு மட்டும் வரும் 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்நிலையில், அங்கு தேர்தலை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் கமிஷன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் வரும் 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றும், வாக்காளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்


அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வாக்காளர்களுக்கு அதிக அளவிலான பண விநியோக விவாகரம் எழுந்ததையடுத்து 16-ம் தேதி நடைபெற வேண்டிய வாக்குப்பதிவு மே 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பாஸ்கரன், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம், திருச்சியைச் சேர்ந்த விவசாயி அய்யாகண்ணு, சுய ஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பாஜகவைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோர் தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

பணப்பட்டுவாடா புகார் இருப்பதால் 23-ம் தேதி தேர்தலை நடத்த தடை விதிக்கவும், தேர்தல் தேதியை ஒத்திவைக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை 3 வாரங்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கிடையே, அங்குள்ள நிலைமை குறித்து தேர்தல் ஆணையம் ஆராயும். மேலும், அந்த இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் குறித்து ஆணையத்திடம் மனு அளிக்கலாம். பின்னர், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

தற்போது ஜூன் 13-ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதியை விரைவில் அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post